

1994-ல் ஷேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் அறிமுகமானவர் நடிகர் மனோஜ் பாஜ்பாயி. பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா படத்தின் மூலம் சினிமாவில் நடித்து மனோஜ் பாஜ்பாயி பிரபலமானார். கேங்ஸ் ஆப் வாஸிப்பூர், தமிழில் அஞ்சான், சமர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
55 வயதான இவர் கமர்ஷியல் படங்களைவிட நல்ல சினிமாக்களில் நடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது தி பேமலி மேன், ஜோரம், குல்மோஹர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. இதுவரை தனது நடிப்பிற்காக மனோஜ் பாஜ்பாயி 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை அந்தேரியில் நடைபெற்ற தனது 100-வது படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இந்தப் படத்தின் பெயர் 'பய்யா ஜி'. பன்சாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தினை அபூர்வ் சிங் கார்கி இயக்கியுள்ளார். விபின் சர்மா, ஜோயா ஹுசைன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் 24-ம் தேதி படம் வெளியாகிறது.
View this post on Instagram
டிரைலர் வெளியீட்டு விழாவில் மனோஜ் பாஜ்பாயி பேசியதாவது: நான் 10 படங்களுக்கு மேல் நடிப்பேன் என நினைத்ததில்லை. ஆனால், வாழ்க்கை என்னை 100 படங்களில் நடிக்க அனுமதித்துள்ளது. இதனால் நான் மட்டுமே கடின உழைப்பை செய்கிறேன் என்று அர்த்தமில்லை, அனைத்து கலைஞர்களுமே தினமும் போராடுகிறார்கள். கடவுள், ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்றார்.