நடிகர் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.

இந்த நிலையில் தற்போது மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மார்கழி திங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com