சூர்யா படத்தில் இணையும் மன்சூர் அலிகான்

சூர்யாவின் புதிய படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா படத்தில் இணையும் மன்சூர் அலிகான்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சூர் அலிகான் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. .

X

Daily Thanthi
www.dailythanthi.com