'பலருக்கு கிடைக்காத அந்த வாய்ப்பு கெரியரின் தொடக்கத்திலேயே எனக்கு கிடைத்திருக்கிறது' - மீனாட்சி சவுத்ரி


Many do not get roles like that - Meenakshi Chaudhary
x

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் மீனாட்சி சவுத்ரி.

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

இவ்வாறு அனைத்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், சமீபத்தில் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்ததாக மீனாட்சி சவுத்ரி கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '2024 எனது சினிமா கெரியரில் ஒரு சிறப்பான ஆண்டாகும். சினிமாவில் பல வருடங்கள் அனுபவம் இருந்தும் பலருக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், என்னுடைய கெரியரின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி' என்றார்.

1 More update

Next Story