பாலாவுக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் மறுத்தனர்- இயக்குனர் ஷெரீப்

கே.பி.ஒய். பாலா தற்போது இயக்குனர் ஷெரீப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமான கே.பி.ஒய். பாலா தனது காமெடி கலந்த பேச்சு திறமையினால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி சில படங்களில் நடித்து வந்த பாலா தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். இப்படம் வருகிற 5-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது. "இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு 50 கிலோ இருந்த பாலா நான்கு மாதங்களில் படத்திற்காக 75 கிலோ எடை அதிகரித்தார். படத்தின் கதையை பல கதாநாயகிகளுக்கு சொன்னேன். கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது பண்ணலாம் என்று சொன்னவர்கள் பாலா ஹீரோவா? என்று கேட்டு என்னிடம் தேதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சிலர் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னார்கள். ஒரு சிலர் செல்போனையே எடுக்க மாட்டார்கள். இப்படி 50 கதாநாயகிகள் விலகி விட்டார்கள்." என்று கூறினார்.






