'என்னை வைத்து படம் எடுக்க பலர் தயங்கினர்' - நடிகர் விமல்

‘துடிக்கும் கரங்கள்' பட நிகழ்ச்சியில் நடிகர் விமல் கலந்துகொண்டு பேசினார்
'என்னை வைத்து படம் எடுக்க பலர் தயங்கினர்' - நடிகர் விமல்
Published on

விமல் 'துடிக்கும் கரங்கள்' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். நாயகியாக மிஷா நரங் மற்றும் சவுந்தரராஜா, சதீஷ், சுரேஷ் மேனன், சங்கிலி முருகன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். வேலுதாஸ் டைரக்டு செய்துள்ளார். கே.அண்ணாதுரை தயாரித்துள்ளார்.

பட நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசும்போது, "பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும்.

இப்போது எல்லாம் நிறைய கையெழுத்துகள் போடுவதில்லை. அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும். சினிமாவுக்கு வந்த புதிதில் நம்ம படம்தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டுவிட்டேன். அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது.

விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசித்து தயங்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம்தான் இந்த 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால்தான் எனக்கு 'விலங்கு' உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com