மராட்டியம்: இளம் நடிகை தூக்கு போட்டு தற்கொலை

உகாலேவின் தந்தையும் இதில் சந்தேகம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
மராட்டியம்:  இளம் நடிகை தூக்கு போட்டு தற்கொலை
Published on

பால்கர்

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் நல்லசோப்ரா பகுதியில் வசித்து வந்தவர் சஞ்சிதா உகாலே (வயது 22). கும்கும் பாக்யா மற்றும் வாக்லே கி துனியா போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அந்த பகுதியில் எதனையும் நாங்கள் கண்டறியவில்லை. தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறியுள்ளார்.

உகாலேவின் தந்தையும் இதில் சந்தேகம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

அவர், நடிகர் விக்கி கவுஷால் நடித்த சாவா படத்திலும், நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான சைலன்ஸ் 2: தி நைட் அவுல் பார் ஷூட்அவுட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com