'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 13ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com