“மார்கோ ” படத்தின் 2ம் பாகம் குறித்த அப்டேட்

‘மார்கோ ’ படத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“மார்கோ ” படத்தின் 2ம் பாகம் குறித்த அப்டேட்
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவரது நடிப்பில் வெளியான 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படமாக உருவாகியுள்ள 'மார்கோ' படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ஏ சான்றிதழ் காரணமாக இந்த படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் மறுக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் மார்கோ படத்தின் அடுத்த பாகம் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. பாகம் 2-க்கு லார்ட் மார்கோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கவில்லை. இப்படத்தை ஹனீப் அடேனி  இயக்குகிறார். திரைப்படத்தை க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகனாக யாஷ் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com