21 ஆண்டுகள் நிறைவு… ‘சச்சின்’ நினைவுகளில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
21 ஆண்டுகள் நிறைவு… ‘சச்சின்’ நினைவுகளில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Published on

சென்னை,

கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இதில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையத்திருந்த இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

காதல், கல்லூரி வாழ்க்கை மற்றும் நகைச்சுவையை இணைத்து உருவாக்கப்பட்ட ‘சச்சின்’ திரைப்படம், வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் விஜய்யின் இளமை தோற்றம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன.

இந்த நிலையில், ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் #Sachin21Years போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி கொண்டாடி வருகின்றனர். மேலும், படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com