கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ பட டிரெய்லர் வெளியீடு


MarkTheFilm Trailer is Officially Out Now
x

‘மார்க்’ படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

சென்னை,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படக்குழு, டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story