பணத்துக்காக திருமணம்: பிரபல நடிகையை சாடிய கங்கனா

இந்தி நட்சத்திர தம்பதிகளான அலியாபட்- ரன்வீர் கபூர் ஆகியோரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்
பணத்துக்காக திருமணம்: பிரபல நடிகையை சாடிய கங்கனா
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'தலைவி' மற்றும் ஜெயம் ரவியுடன் 'தாம்தூம்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பதோடு, அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தி நட்சத்திர தம்பதிகளான அலியாபட்- ரன்வீர் கபூர் ஆகியோரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

தற்போது அவர்களை பற்றி கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "அந்த இந்தி நட்சத்திர ஜோடி வேறு வேறு மாடிகளில் வசிக்கிறார்கள். ஆனால் வெளி உலகத்துக்கு சேர்ந்து இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர். சமீபத்தில் அவர் (ரன்பீர் கபூர்) குடும்ப உறுப்பினர்களோடு லண்டன் சென்றார்.

ஆனால் மனைவி அலியா பட், மகள் ராஹா இந்தியாவிலேயே இருந்தார்கள். பணத்துக்காக திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. மாபியா நெருக்கடியால் திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த போலியான திருமண விவகாரத்தில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இந்தியாவில் ஒரு முறை திருமணம் ஆனால் அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்ட மாதிரி தான்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com