திருமண வாழ்க்கை சரியில்லையா? பெண்கள் விவாகரத்து செய்துவிடுவது நல்லது - மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா தனது சொந்த வாழ்க்கை பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்
திருமண வாழ்க்கை சரியில்லையா? பெண்கள் விவாகரத்து செய்துவிடுவது நல்லது - மனிஷா கொய்ராலா
Published on

நடிகை மனிஷா கொய்ராலாவை தமிழ் ரசிகர்கள் எளிதாக மறந்து விட முடியாது. நேபாளத்தை சேர்ந்த இவர் பம்பாய், இந்தியன், ஆளவந்தான், முதல்வன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

மனிஷா கொய்ராலாவுக்கு ஏற்கனவே திருணம் முடிந்து விவாகரத்து செய்து விட்டார். புற்றுநோய் பாதிப்பில் சிக்கியும் மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டார். மீண்டும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சொந்த வாழ்க்கை பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, "நான் நேபாளை சேர்ந்த தொழில் அதிபர் தஹலை 2010-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

எத்தனையோ கனவுகள் கண்டேன். ஆனால் ஆறு மாதத்தில் பிரிய வேண்டி வந்தது. நான் காதலித்த கணவரே எனக்கு விரோதியாக மாறிவிட்டார். நான் மட்டுமல்ல அனைத்து பெண்களுமே திருமண பந்தத்தில் சந்தோஷமாக இல்லை என்றால் விவாகரத்து செய்து பிரிந்து விடுவதுதான் நல்லது. குடும்பத்தினர், நண்பர்களால் தற்போது வாழ்க்கை நன்றாகவே உள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com