நடிகை அஞ்சலியுடன் திருமணமா? நடிகர் ஜெய் விளக்கம்

நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் உள்ளன.
நடிகை அஞ்சலியுடன் திருமணமா? நடிகர் ஜெய் விளக்கம்
Published on

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவது, சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர் மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது என்று காதலை உறுதிப்படுத்துவதுபோல் நடந்து கொண்டனர்.

ஜெய்யும், அஞ்சலியும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஜெய் ஒரு பேட்டியில் அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது என்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல் கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:-

என்னையும் அஞ்சலியையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.

இவ்வாறு ஜெய் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com