

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஹிருத்திக் ரோஷன் 2000-ம் ஆண்டில், சினிமா பேஷன் டிசைனராக பணியாற்றிய சுஷானே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. 14 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை சபா ஆஷாத்துக்கும், ஹிருத்திக் ரோஷனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.
இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.
சபா ஆசாத்தை ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு அவர்களின் குழந்தைகளும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.