"மருதாணி" அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகிறது

அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் 3வது பாடல் இன்று மாலை வெளியாகிறது.
"மருதாணி" அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகிறது
Published on

சென்னை,

அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினிகாந்த் தோன்றும் பரபரப்பான சண்டை காட்சிகள் இடம்பெற்ற படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்த 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் மற்றும் 'சாரல் காற்றே' என்ற பாடல் என ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மணி அமுதவன் எழுதியுள்ள 'மருதாணி' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com