"சக்தித் திருமகன்" படத்திலிருந்து "மாறுதோ" பாடல் வெளியீடு

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள "சக்தித் திருமகன்" படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
"சக்தித் திருமகன்" படத்திலிருந்து "மாறுதோ" பாடல் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மார்கன்' என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சக்தித் திருமகன் படத்திலிருந்து மாறுதோ என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அபிஜித் அனில்குமார் பாடியுள்ளார். பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com