கவினின் ‘மாஸ்க்’...வெளியானது ‘கண்ணுமுழி’ பாடல்

‘மாஸ்க்’ திரைப்படத்தின் ‘கண்ணுமுழி’ பாடல் வெளியாகி உள்ளது.
MASK 1st single Kannumuzhi is Out Now
Published on

சென்னை,

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் கண்ணுமுழி பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கிஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com