உலகம் முழுவதும் ரூ.89 கோடியை வசூலித்த 'மாவீரன்' : படக்குழு அறிவிப்பு

மாவீரன் திரைப்படம் இதுவரை ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ரூ.89 கோடியை வசூலித்த 'மாவீரன்' : படக்குழு அறிவிப்பு
Published on

 சென்னை,

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் இதுவரை ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com