மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் மற்றும் சரிதா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு படக்குழ் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சரிதா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com