"உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மலரட்டும்" - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி


உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மலரட்டும் - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி
x

இந்த புனித நாளில், நம் உள்ளங்களில் ஒற்றுமை மற்றும் மனிதநேயம் கொண்டு ஒளிரட்டும் என சூரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரம்ஜானுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் உள்ளது. பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாள் அல்லது ஈத் அல்-அதா என்றும் அழைக்கிறார்கள். பக்ரீத் பண்டிகை, இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,

"அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்! இந்நாளில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மலரட்டும், உங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஆசீர்வாதமும் நிரம்பட்டும். பகிர்வு, கருணை, மற்றும் அன்பு நிறைந்த இந்த புனித நாளில், நம் உள்ளங்கள் ஒற்றுமை மற்றும் மனிதநேயம் கொண்டு ஒளிரட்டும். ஈத் முபாரக்!" என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story