உங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்கு மேலும் பலம் சேரட்டும்!- விஜய்க்கு டைகர் ஷெராப் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் தனது எக்ஸ் பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்கு மேலும் பலம் சேரட்டும்!- விஜய்க்கு டைகர் ஷெராப் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கள நிலவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து, வாக்காளர்களுக்குப் பணமும், அண்டா-குண்டா போன்ற பரிசுப் பொருட்களையும் வாரி இறைத்த திமுக, அதிமுக கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் தனது எக்ஸ் பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!.. உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காண்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது. உங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்திற்கு மேலும் பலம் சேரட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com