

இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் இதில் சிக்கினர். மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து கூறிய மோகன்லால் மீ டூ வை பேஷன் ஆக்கி விட்டனர். இந்த இயக்கம் விரைவில் மறைந்து விடும் என்றார். மீ டூ வை சிலர் பழிவாங்க பயன்படுத்துவதாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்த நிலையில் நடிகை பிரியாமணியும் மீ டூ வை தவறாக பயன்படுத்துவதாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தற்போதையை சமூகத்தில் மீ டூ என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இயக்கத்தை பயன்படுத்தி மேலும் நிறைய பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பகிரங்க படுத்த வேண்டும். அதேநேரம் சில போலித்தனமான புகார்களும் இதில் வருகின்றன. மீ டூ நேர்மையான தளம். ஆனால் பலர் விளம்பரத்துக்காக இதை தவறாக பயன்படுத்துகின்றனர்.
உண்மையாகவே செக்ஸ் தொல்லைகளை அனுபவிப்பவர்களுக்கான தளமாக மட்டுமே மீ டூ இருக்க வேண்டும். நான் எந்த சினிமா சங்கத்திலும் இல்லை. ஆனாலும் நல்ல விஷயங்களுக்காக முன்னால் நின்று உதவுவேன்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.