அடுத்த படம்...பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி?

மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை,
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, கடந்த ஆண்டு ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் 'மட்கா' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.
சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'சங்கராந்திகி வஸ்துன்னம் ' படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படத்தைத்தொடர்ந்து, நவீன் பொலிஷெட்டியுடன் 'அனகனக ஓக ராஜு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, நாக சைதன்யாவின் 24-வது படத்தில் மீனாட்சி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் தண்டு இயக்க உள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிகின்றது.






