முதல் முறையாக முழு நீள நகைச்சுவை படத்தில் மீனாட்சி சவுத்ரி


Meenakshi Chaudhary in a comedy film for the first time
x

மீனாட்சி சவுத்ரி தமிழில் விஜய்யுடன் ’தி கோட்’ படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

2024-ம் ஆண்டில் ஆறு படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு கடந்த ஆண்டு ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் தொடர்ச்சியான படங்களுடன் மகிழ்விக்க அவர் தயாராகி வருகிறார்.

கடைசியாக துல்கர் சல்மானுடன் 'லக்கி பாஸ்கர்' மற்றும் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துனம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த இவர், தற்போது நாக சைதன்யாவின் ’விருஷகர்மா’மற்றும் நவீன் பாலிஷெட்டியின் 'அனகனகா ஓக ராஜு’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

இதில், ’அனகனகா ஓக ராஜு’ படம் வருகிற 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையில், ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி, 'அனகனகா ஓக ராஜு' படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் வேசுகையில், ’இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனென்றால், நான் முதல் முறையாக ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

இப்படம் கண்டிப்பாக பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகும் என்று நம்புகிறேன். இது ஒரு 100 சதவீதம் முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம்," என்றார்.

1 More update

Next Story