சாந்தினி சவுத்ரி, ராஷ்மிகாவை தொடர்ந்து அந்த பட்டியலில் இணைந்த மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி மற்றும் ராஷ்மிகாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வாறு செயல்பட போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Meenakshi Chaudhary joins the list after Chandini Chowdary and Rashmika
Published on

சென்னை,

ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது ஹீரோயின்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன. முன்னதாக நடிகை சாந்தினி சவுத்ரி நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியானதை பார்த்தோம். சமீபத்தில், இந்த பட்டியலில் ராஷ்மிகாவும் இணைந்தார். இந்நிலையில், தற்போது மீனாட்சி சவுத்ரியும் அதில் இணைந்துள்ளார்.

மீனாட்சி, தற்போது சில படங்களில் பிஸியாக இருக்கிறார். லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பின்னர், அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதேபோல், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள மற்றொரு படமான மெக்கானிக் ராக்கியும் அதே நாளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஸ்வக் சென் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

மறுபுறம், ராஷ்மிகாவின் புஷ்பா 2 கடந்த 15-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிப்போனது. இதே நாளில், ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படமான 'சாவா'வும் வெளியாக உள்ளது. இதில் விக்கி கவுசல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் 14-ம் தேதி சாந்தினி சவுத்ரி நடிப்பில் மியூசிக் ஷாப் மூர்த்தி மற்றும் ஏவம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. இந்நிலையில், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராஷ்மிகாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வாறு செயல்பட போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com