'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' - நடிகை மீனாட்சி சவுத்ரி


Meenakshi Chaudhary says she is the luckiest actress
x

கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், கெரியரின் துவக்கத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றது தனது அதிர்ஷ்டம் என்று மீனாட்சி கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. விஜய்யுடன் தி கோட், மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும், வெங்கடேஷ் போன்ற மூத்த நட்சத்திரங்களுடனும் நடித்தது எளிதாக இருந்தது. தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' போன்ற படத்தில் வலுவான கதாபாத்திரத்தை பெற்றது எனது அதிர்ஷ்டம்' என்றார்.

1 More update

Next Story