மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் எது?


Meenakshi Chaudhary’s next: Anaganaga Oka Raju
x
தினத்தந்தி 5 March 2025 10:57 PM IST (Updated: 6 May 2025 3:07 PM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி சவுத்ரி நடிப்பில் அடுத்தாக வெளியாக இருக்கும் படம் 'அனகனக ஓக ராஜு'

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' விஜய்யின் 'தி கோட்' , துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் அடுத்தாக வெளியாக இருக்கும் படம் 'அனகனக ஓக ராஜு'

தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இன்று நடிகை மீனாட்சி சவுத்ரியின் 29-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'அனகனக ஓக ராஜு' படக்குழு வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

1 More update

Next Story