மீனாட்சி உன்னிகிருஷ்ணனின் 'நைட் ரைடர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு


Meenakshi Unnikrishnans night Riders shooting completed
x

இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

சென்னை,

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி உன்னிகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'வாழ' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் 'நைட் ரைடர்ஸ்' என்ற ஹாரர் காமெடி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நவுபல் அப்துல்லா இயக்கி இருக்கிறார். இதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். மீனாட்சி உன்னிகிருஷ்ணனுடன், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமான மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், ஆவேசம் நடிகர் ரோஷன் ஷானவாஸ், ஷரத் சபா, மெரின் பிலிப், சினில் ஜைனுதீன், நவுஷாத் அலி, நசீர் சங்கராந்தி மற்றும் சைத்ரா பிரவீன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.


Next Story