நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின்

'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார்.
நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தில் இணைந்த மீரா ஜாஸ்மின்
Published on

சென்னை,

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'டெஸ்ட்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'டெஸ்ட்' படத்தின் மோஷன் போஸ்டரை அண்மையில் படக்குழு சில வெளியிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Y Not Studios (@StudiosYNot) May 9, 2023 ">Also Read:

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com