'விமானம்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடரும் மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் நடிக்கும் 'விமானம்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
'விமானம்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடரும் மீரா ஜாஸ்மின்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ரன், புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், மீரா ஜாஸ்மின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீரா ஜாஸ்மினின் பிறந்தாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'விமானம்' என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடர உள்ளதாகவும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

She's back people!
Wishing the ever-charming
#MeeraJasmine a very happy birthday After a decade she will grace our screens with her presence in #Vimanam

Our Next Telugu - Tamil bilingual film in association with @KkCreativeWorks

And we know she will be better than ever pic.twitter.com/4ySTLVS2oB

Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com