

சென்னை,
நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'மார்க் ஆண்டனி' திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 'மார்க் ஆண்டனி' படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், நடிகர் விஜய்யை சந்தித்தது தான் தனது 'மறக்குமா நெஞ்சம்' தருணம் என்று தெரிவித்துள்ள அவர், அந்த தருணத்தில் இருந்து எல்லாமே சிறப்பாக அமைந்ததாகவும், 'நன்றி விஜய் அண்ணா' என்றும் பதிவிட்டுள்ளார்.
Vinod Kumar (@vinod_offl) September 16, 2023 ">Also Read: