எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ்


Meghna Raj Returning to Malayalam cinema after 8 years
x

நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார்.

சென்னை,

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி 2 வருடங்களிலேயே சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த மலையாளத் திரையுலகிற்கே எட்டு வருடம் கழித்து திரும்பி உள்ள மேக்னா ராஜ் தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

மீண்டும் மலையாள படத்தில் நடிப்பதற்காக செட்டிற்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்ததும் மீண்டும் தாய்வீடு திரும்பியது போன்று உணர்வு ஏற்பட்டதாக மேகனா ராஜ் கூறியுள்ளார் . இவர் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story