

சென்னை,
"உடலளவில் ஆம்ஸ்டர்டாமில் இருந்தாலும், மனதளவில் எனது வீட்டிலேயே இருந்தேன்" என்று நடிகை நிவேதா தாமஸ் தனது நெதர்லாந்து பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
நடிகை நிவேதா தாமஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு சமீபத்தில் நடிகை நிவேதா தாமஸ் சென்றிருந்தார். நிவேதா அங்குள்ள தெருக்களில் உலா வந்தபோது ஒரு பூக்கடையைக் கடந்து சென்றுள்ளார். அங்கிருந்த மலர்களின் பிரத்யேக நிறக் கலவை, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள அவரது வீட்டையும், அவரது தாயாரையும் உடனடியாக நினைவூட்டியது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "அந்தப் பூக்கடையில் நான் பார்த்த மலர்களின் நிறங்கள், எனது தாயாரின் 32 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் வண்ணங்களை அப்படியே பிரதிபலித்தன. அந்த நொடியில், நான் ஆம்ஸ்டர்டாமில் இருந்தாலும் மனதால் எனது வீட்டிற்கே சென்றுவிட்டேன். சில எளிய தருணங்கள் நம்மை எவ்வளவு தூரம் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன!" என்று வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். அந்நிய தேசத்தில் இருந்தாலும், தாய் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவரது இந்த பாசப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.