

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த‘நானே வருவேன்’ படம் 2022ல் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மெண்டல் மனதில்'. 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படமாகும்.
இப்படத்தில், நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘மெண்டல் மனதில்’ படத்தின் முதல் பாடலான 'உயிரே உயிரே' வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகி உள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படம் நேற்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.