

சென்னை,
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீடூ விவகாரத்தில் நியாயமான முறையில் குறையை சொல்ல வேண்டும். மழைக்காக இடைத்தேர்தலை தள்ளி போட வேண்டுமா?.
சிலை மீட்பு விவகாரத்தில் நாங்கள் உதவி செய்கிறோம் என்றபோது வேண்டாம் என்றார்கள். கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் காணாமல் போக வாய்ப்பில்லை என்று கூறினார்.