பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
பிரபல நடிகர் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு
Published on

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அலோக் நாத். இவர் மீது எழுத்தாளரும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளருமான விந்தா நந்தா கடந்த மாதம் மும்பை ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து இருந்தார்.

தன்னை கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் அலோக் நாத் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், துன்புறுத்தியதாகவும் புகாரில் கூறி இருந்தார். முன்னதாக மீ டூ இயக்கத்தின் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமையை நந்தா கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஒசிவாரா போலீசார் அலோக் நாத் மீது தற்போது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

62 வயதாகும் அலோக் நாத் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com