‘மேயாத மான்’ டைரக்டருடன் இணைந்தார், அமலாபால்!

‘மேயாத மான்’ பட டைரக்டரின் அடுத்த படத்தில் அமலாபால் நடிக்கிறார்.
‘மேயாத மான்’ டைரக்டருடன் இணைந்தார், அமலாபால்!
Published on

சமீபத்தில் திரைக்கு வந்த மேயாத மான் படத்தை டைரக்டு செய்தவர், ரத்னகுமார். தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்த படத்தை இயக்க தயாராகிறார். இதில் கதைநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.

உணர்ச்சிகரமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதாலேயே அமலாபால் மற்ற படங்களில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார்.

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை, பெண்கள் முன்னேற்றத்துக்கான படம் அல்லது சூப்பர் நேச்சுரல் திகில் படம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராதது. முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான-பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.

படத்துக்கு, ஆடை என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. விஜி சுப்பிரமணியன் தயாரிக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com