ரசிகர்கள் முன் தோன்றிய எம்.ஜி.ஆர்.

ரசிகர்கள் முன் தோன்றிய எம்.ஜி.ஆர்.
Published on

22-10-1969-ம் நாள் சிந்தாமணி தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். வந்தார். தியேட்டர் பால்கனியின் அவர் நின்றபடி, ரசிகர்களைப் பார்த்து கையசைத்த காட்சி.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக கலரில் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற சினிமா 1956-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. 1965-ம் ஆண்டில் இருந்து 1977 வரை எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் சிந்தாமணி தியேட்டரில் வெளியாகி சாதனை படைத்தன.

1965-ம் ஆண்டில் கலங்கரை விளக்கம், 1966-ம் ஆண்டில் அன்பே வா, 1967-ம் ஆண்டில் காவல்காரன், 1968-ம் ஆண்டில் ரகசிய போலீஸ்-115, கண்ணன் என் காதலன், 1969-ம் ஆண்டில் அடிமைப்பெண். 1970-ம் ஆண்டில் மாட்டுக்காரவேலன், எங்கள் தங்கம், 1971-ம் ஆண்டில் குமரிக்கோட்டம், 1972-ம் ஆண்டில் ராமன் தேடிய சீதை, இதயக்கனி, மீனவநண்பன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டு உள்ளன.

அடிமைப்பெண் படம் சிந்தாமணியில் 25 வாரங்கள் ஓடிச் சாதனை நிகழ்த்தியது. 22-10-1969-ம் நாளன்று எம்.ஜி.ஆர்., அந்தப் படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் சிந்தாமணிக்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்கள்.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்கள் இந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகியதால், மதுரை சிந்தாமணிக்கு எம்.ஜி.ஆரும் உரிமையாளராக இருப்பாரோ என அக்காலத்தில் ரசிகர்கள் மனதில் சந்தேகம் நிலவியதாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்களுக்கு சிந்தமாணி தியேட்டர் நிர்வாகத்தினர் முக்கியத்துவம் கொடுத்து ரிலீஸ் செய்தார்கள் என மலரும் நினைவுகளை விவரித்தார், மதுரையைச் சேர்ந்த சினிமா ஆர்வலரான கணேசன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com