எம்.ஜி.ஆர் எனக்கு சாபம் விட்டுச் சென்றார்: நடிகர் சிவக்குமார் கலகல பேச்சு

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் எனக்கு சாபம் விட்டுச் சென்றார்: நடிகர் சிவக்குமார் கலகல பேச்சு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் ‘மார்க்கண்டேயன்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். 84 வயதானாலும், என்றும் உற்சாகத்துடன் இருப்பதால் அவரை ரசிகர்கள் அவ்வாறு அழைத்து வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பே நடிப்புக்கு ஓய்வளித்த நடிகர் சிவக்குமார், தற்போது சொற்பொழிவுகளிலும் ஓய்விலும் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் நடந்த பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய சிவக்குமார் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சிவக்குமார் பேசியதாவது: “என்னுடைய நூறாவது படத்தில் ‘சாகும் வரை இளமையாக இருப்பான் சிவக்குமார்’ என்று எம்.ஜி.ஆர் சாபம் விட்டுச் சென்றார். எம்.ஜி.ஆர் சொன்னது போல இன்றும் நான் இளமையாக இருக்கிறேன். எனக்கு 85 வயது ஆகிறது. ஆனால் என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது?” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com