

எம்.ஜி.ஆர். மகன் படத்தில் சத்யராஜ்-சசிகுமார் இருவரும் தந்தை-மகனாக நடித்து இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை டைரக்டு செய்த பொன்ராம் இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் பொன்ராம் கூறும்போது...
இந்த படத்தில், எம்.ஜி.ஆர். என்று அழைக்கப்படும் கிராமத்து வைத்தியராக சத்யராஜும், அன்பளிப்பு ரவி என்ற சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமாரும் தந்தை-மகனாக நடித்துள்ளனர். கதாநாயகி மிருணாளினி ரவி எப்படி அந்த தந்தை, மகன் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பது கதை. வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார்.