4 நாட்களில் ரூ.2200 கோடி வசூல் ஈட்டிய “மைக்கேல்” திரைப்படம்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமான ‘மைக்கேல்’ திரைப்படம் கடந்த 24-ந்தேதி வெளியானது.
4 நாட்களில்  ரூ.2200 கோடி வசூல் ஈட்டிய  “மைக்கேல்” திரைப்படம்
Published on

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் ஏற்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்

‘மைக்கேல்’ படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். 'கிளாடியேட்டர்' புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், ‘மைக்கேல்’ படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 2200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com