முதல் வாரத்தில் ரூ.112 கோடி வசூலித்த “மிராய்”

தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் நடித்துள்ள ‘மிராய்’ படம் முதல் வாரத்தில் ரூ.112 கோடி வசூல் செய்துள்ளது.
நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது. இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும்.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான "வைப் இருக்கு பேபி" பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.இப்படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியானது.
இந்நிலையில் ‘மிராய்’ படம் முதல் வாரத்தில் ரூ.112.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






