மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ்

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ்
Published on

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், தணிக்கை வாரியம் 'பறந்து போ' படத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com