

ஐதராபாத்,
‘தேவரா’ படத்தில் வரும் பாடல் காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்' செய்து ஆபாசம் தெறிக்கும் வகையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம். என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் (Deepfake) உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் ஆள்மை உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டீப்-ஃபேக் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பல பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட படம், 'தேவரா'. இந்த படத் தில் வரும் 'சுட்டமல்லி...' என்ற பாடல் பெரிய அளவில் 'ஹிட்'டானது. பாடலில் ஜான்வி கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார்.
இந்தப் பாடல் காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்' செய்து ஆபாசம் தெறிக்கும் வகையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "பெண்களை தாயாகவும், தெய்வமாகவும் பார்க்கும் பூமி இது. அதுதான் நமது பெருமை மிகு கலாசாரமும் கூட. ஆனால் சிலர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.
அந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம். நாளை நம் வீட்டு பெண்களுக்கும் இது நடக்கலாம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு சட்டம் போட வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.