ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்

படக்குழுவினர் வெளியிட்டுள்ள டிரெய்லர் காட்சிகள் வீடியோ கேம் போலவும், அனிமேஷன் படம் போல இருப்பதாகவும் ராமாயண கதையை பொம்மை படம்போல் மாற்றியதுடன் ராவணனை தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் வலைத்தளத்தில் விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது
ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்
Published on

ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து ரூ.500 கோடி செலவில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும் சயீப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள டிரெய்லர் காட்சிகள் வீடியோ கேம் போலவும், அனிமேஷன் படம் போல இருப்பதாகவும் ராமாயண கதையை பொம்மை படம்போல் மாற்றியதுடன் ராவணனை தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் வலைத்தளத்தில் விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த படம் குறித்து பா.ஜ.க. பிரமுகர் மாளவிகா அவினாஷ் கூறும்போது, ''ஆதிபுருஷ் படத்தில் ராவணனை நீல கண்களுடன் லெதர் ஜாக்கெட் அணிந்த தோற்றத்தில் தவறாக காட்டி இருப்பது வேதனை அளிக்கிறது. பூ கைலாஷ் படத்தில் ராவணனாக நடித்த என்.டி.ராமராவ் அல்லது சம்பூர்ண ராமாயணம் படத்தில் எஸ்.வி.ரங்காராவ் செய்த ராவணனின் கதாபாத்திரத்தை பார்த்தால் அதன் மகத்துவம் புரியும். இலங்கையை சேர்ந்த ராவணன் ஒரு சிவபக்தர். 64 கலைகளை கற்றவர். வைகுண்த பாலகரான ஜெய விஜயர்களின் சாபம் காரணமாகவே ராவணனாக அவதரித்தார். ஆனால் ஆதிபுருஷில் ராவணன் சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார். நமது ராமாயண சரித்திரத்தை தவறாக காட்டுவதை நிறுத்துங்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com