அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்- 1' படம் பொங்கலுக்கு வெளியாகும் - பட நிறுவனம் அறிவிப்பு..!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மிஷன் சாப்டர் -1.
அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்- 1' படம் பொங்கலுக்கு வெளியாகும் - பட நிறுவனம் அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மிஷன் சாப்டர் -1 அச்சம் என்பது இல்லையே '. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே ' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே ' படம் பொங்கலுக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com