மோகன் ஜியின் "திரௌபதி 2" பட டிரெய்லர் அப்டேட்

மோகன் ஜி இயக்கி இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
மோகன் ஜியின் "திரௌபதி 2" பட டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

அதனை தொடர்ந்த இப்படத்திலிருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com