மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை சின்மயி பாடியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23ந் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com