அலட்டிக் கொள்ளாத மோகன்லால்

திரைப்பட நடிகையின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் நடிகர் திலீப்.
அலட்டிக் கொள்ளாத மோகன்லால்
Published on

திரைப்பட நடிகையின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நடிகர் திலீப்பை, மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்த விஷயம், பெரும் பிரளயத்தையே உண்டாக்கியிருக்கிறது. பல தரப்பிலும் இருந்து நடிகர் சங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது. கன்னட நடிகர் சங்கம் கூட நடிகர் திலீப்பை, சங்கத்தில் சேர்த்ததற்கு கண்டம் தெரிவித்திருந்தது.

ஆனால் நடிகர் சங்கத்தின் புதிய தலைவரான மோகன்லால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதுபோலவே தெரியவில்லை என்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலோடுதான் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அது என்னுடைய தன்னிப்பட்ட விருப்பம் அல்ல. ஆனால் கூட்டத்திற்கு வராத சிலர் இதனை பெரிய பிரச்சினையாக உருவாக்கிவிட்டனர். அவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறிவருகிறாராம்.

இதற்கிடையில் திலீப், என் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தின் மூலமாக துடைத்தெறிந்த பிறகே நடிகர் சங்கத்தில் சேருவேன் என்று நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com